மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஏனங்குடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஏனங்குடி எம்.எம்.தெருவில் 2021-22-ம் நிதியாண்டில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதில் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் (பொறுப்பு) இறையன்பு, ஊராட்சி செயலர் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story