அதிக பாரம் ஏற்றிய கனிமவள லாரி மின்கம்பத்தில் மோதல்
அதிக பாரம் ஏற்றிய கனிமவள லாரி மின்கம்பத்தில் மோதல்
கன்னியாகுமரி
களியக்காவிளை:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினமும் கனிமவளங்கள் ஏராளமான லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதில் அதிக பாரம் ஏற்றி செல்லப்படும் லாரிகளை பிடித்து அதிகாரிகள், போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று களியக்காவிளை அருகே படந்தாலுமூடு அரசு பணிமனை முன்பு அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனிமவள லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்கும் ஓடி சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதே சமயத்தில் அந்த பகுதியில் திரண்டு வந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மேலும் இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story