திருப்பத்தூரில் ஒரே இரவில்3 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை
திருப்பத்தூரில் ஒரே நாளில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்கள் ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு சில்லறை நாணயங்களை தூக்கிச்செல்ல முடியாமல் தெருவில் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் ஒரே நாளில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்கள் ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு சில்லறை நாணயங்களை தூக்கிச்செல்ல முடியாமல் தெருவில் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்டியலை உடைத்து திருட்டு
திருப்பத்தூர் டவுன் 25-வது வார்டு ராமசாமியார் பகுதியில் தேசத்து மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூசாரிகள் பூட்டிச்சென்றனர்.நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த தாலி திருடயதோடு உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நகைகள் மற்றும் காணிக்கை பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு வெளியேறினர்.
அதன்பின் ரூபாய் நோட்டு மற்றும் அம்மன் தாலியை மட்டும் எடுத்துக்கொண்டு சில்லறை நாணயங்களை தூக்சிச்செல்ல முடியாததால் அவற்றை தெருவில் வீசி விட்டு தப்பினர்.இதே போன்று திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பசலிக்குட்டை பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயம் மற்றும் பாட்டை மாரியம்மன் கோவில் என ஒரே இரவில் அடுத்தடுத்து கோவில்களில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம், சாமி நகைகள் திருடி சென்றுள்ளனர். அந்த கோவில்களின் உண்டியல்களில் இருந்தும் சில்லறை காசுகளை தூக்கிச்செல்ல முடியாமல் அவற்றை கால்வாயில் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து திருப்பத்தூர் டவுன் மற்றும் தாலுகா போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் பகுதியில் 3 கோவில்களில் அடுத்தடுத்து நகை பணம் கொள்ளயைடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=========