சிமெண்டு மூடைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; உரிமையாளர் பரிதாப சாவு

சிமெண்டு மூடைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; உரிமையாளர் பரிதாப சாவு
x

சாத்தூர் அருகே பஸ் மோதிய விபத்தில் சிமெண்டு மூடைகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த மூடைகளுக்கு இடையே சிக்கி லாரி உரிமையாளர் உயிரிழந்தார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே பஸ் மோதிய விபத்தில் சிமெண்டு மூடைகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த மூடைகளுக்கு இடையே சிக்கி லாரி உரிமையாளர் உயிரிழந்தார்.

லாரி கவிழ்ந்தது

நெல்லை மாவட்டம் மேலஇலந்தைகுளத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 52). சிமெண்டு கடை வைத்து நடத்தி வந்தார். இவரது லாரி சிமெண்டு மூடைகளுடன் சாத்தூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை கோபிநாத் என்பவர் ஓட்டிச்சென்றார். கூடவே அய்யாதுரை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

இந்தநிலையில், மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் மோதியது. இதில் நிலை தடுமாறிய லாரி சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

மூடைகளுக்குள் சிக்கி பலி

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அய்யாதுரையும் தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். அவர் மீது லாரியில் இருந்த சிமெண்டு மூடைகள் விழுந்தன. மூடைகளுக்கு அடியில் சிக்கிய அய்யாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பசும்பொன்முடியரசன் (50) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story