லாரிசெட் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கடன்தொல்லையால் லாரிசெட் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் பால்மாரி (வயது 42). இவர் முருகேசன்நகர் பகுதியில் லாரி செட் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனம் உடைந்த அவர், தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு டைரியில், 'அதிகமாக கடன் வாங்கியதால், அதில் இருந்து மீளுவதற்கு வழி தெரியவில்லை. இதனால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்' என்று எழுதி வைத்து இருந்தாராம். அதனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story