ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன், உயிர் காக்கும் கருவிகள்


ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன், உயிர் காக்கும் கருவிகள்
x

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன், உயிர் காக்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்குதல் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிகின்ற சிறந்த பணியாளர்களுக்கு சிறப்பு செய்தல், நகராட்சி மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவிகள் வழங்குதல், நலிந்தோருக்கு தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பி.அருணகிரி தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ் சேவையை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் நிர்மல் ராகவன, வெளிச்சம் சேர்மன் ஆர்.வி.ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு திருப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உயிர் காக்கும் உபகரங்கள், ஆக்சிஜன், தள்ளுவண்டி மற்றும் தையல் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கே.எம்.சுப்பிரமணியம், பி.சோமு, டி.தேவராஜன், கே.எம்.டி.சுபாஷ், ஆர்.ஆர்.மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பாரதி நன்றி கூறினார்.


Next Story