ஓசோன் தின விழிப்புணர்வு ஊர்வலம்


ஓசோன் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

சந்தவாசலில் ஓசோன் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே சந்தவாசலில் ஓசோன் தின விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.

சந்தவாசல் வனச்சரகர் சக்திவேல் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை கிறிஸ்டோபர், சந்தவாசல் வழக்கறிஞர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சந்தவாசல் படிப்பக பயனாளிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஊர்வலத்தில் மின்சாதன பொருட்கள், வாகன பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story