பச்சையம்மன் கோவில் தேரோட்டம்


பச்சையம்மன் கோவில் தேரோட்டம்
x

பச்சையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில் ஆவணி மாத தேர்த்திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி காப்பு கட்டப்பட்டு, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை திருக்கல்யாணம், பொங்கல் பூஜை நடைபெற்றது. பின்னர் மாலையில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கோவிலை சுற்றி வந்து நிலையை அடைந்தது. பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கி, தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


Next Story