காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும், மத்திய அரசால் ஏற்பட்ட விலைவாசி உயர்வை கண்டித்தும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்குடி ராஜீவ் காந்தி சிலையிலிருந்து மானாமதுரை வரை 75 கிலோமீட்டர் பாதயாத்திரை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமசாமி, மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, பொருளாளர் பழனியப்பன், மாநில நிர்வாகி ஜெயசிம்மா, காரைக்குடி நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, வட்டார தலைவர்கள் ரமேஷ், செல்வம், கருப்பையா, வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் சஞ்சய், சித்திக், கவுன்சிலர் ரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Next Story