காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

பாலக்கோட்டில் இருந்து மாரண்டஅள்ளி வரை காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு நகர காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து பஸ் நிலையம், ஸ்தூபி மைதானம், மல்லாபுரம் வழியாக மாரண்டஅள்ளி வரை பாதயாத்திரை சென்றனர். ஆத்துக்கொட்டாய் பகுதியில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் கட்சி கொடி ஏற்றினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். வழிநெடுகிலும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு குறித்தும், உணவு பொருளான அரிசி மற்றும் பாலுக்கு ஜி.எஸ்.டி. வரி குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சண்முகம், செந்தில்குமார், ராமநாதன், காட்டுராஜா, வீரமணி, ஏ.எஸ்.டி.சி சித்தையன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story