காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை
காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடந்தது.
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9-ந் தேதி முதல் பாதயாத்திரை காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 3-ம் நாள் நடைபயணமாக திருக்கோஷ்டியூரில் இருந்து மதகுபட்டிவரை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மா, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி இமயமெடோனா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி, நகர்மன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், கல்லல் யூனியன் துணைத்தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரிகண்ணன், முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரி, முன்னாள் வட்டார தலைவர் உடையார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதகுபட்டி வந்த இந்த குழுவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று ஒக்கூரில் தங்குகின்றனர். இந்த பாதயாத்திரை வருகிற 14-ந் தேதி மானாமதுரையில் முடிவடைகிறது.