காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
ஓசூர், போச்சம்பள்ளியில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடைபெற்றது.
ஓசூர்
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஓசூரில் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே பாதயாத்திரையை முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் தொடங்கிவைத்தார். ஓசூர் மாநகர கமிட்டி தலைவர் நீலகண்டன், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் சாதிக் கான், மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனிவாச ரெட்டி, நாகராஜ், முன்னாள் இளைஞரணி நிர்வாகி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் காளிமுத்து, ராஜி, நாராயணன், வெள்ளைச்சாமி, டி.வி.எஸ். முனிராஜ் உள்ளிட்ட ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பாதயாத்திரை சிப்காட், மூக்கண்டபள்ளி, தர்கா வழியாக சென்று ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகே நிறைவடைந்தது.
இதேபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை போச்சம்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நடராசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் சேகர், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரவி வரவேற்று பேசினார். மாநில பொது செயலர் இளஞ்செழியன் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பொது செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் மாது, தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.