நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் தாமதம்


நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் தாமதம்
x

நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் தாமதம்

திருப்பூர்

முத்தூர்,

முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் தாமதம் அடைந்து உள்ளன.

நஞ்சை சம்பா நெல் சாகுபடி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வினாடிக்கு 2,400 கன அடி வீதம் வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி திருப்பூர் மாவட்டம் முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டன.

அறுவடை பணிகள் தாமதம்

ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகை முடிந்த 4 நாட்களில் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 50 நாட்களுக்கு வரை இடைவிடாது நடைபெறும். ஆனால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட பின்பு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பெருந்துறை பகுதிகளில் இருமுறை பிரதான கால்வாயில் எதிர்பாராதவிதமாக உடைப்பு ஏற்பட்டதால் தொடர் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் கால்வாய் உடைப்பு சீரமைக்கப்பட்டு மீண்டும் கால்வாய்களில் சம்பா நெல் பயிர் சாகுபடிக்கு தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் இரு முறை ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதி நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு கால்வாயில் தண்ணீர் வந்து சேர்வதற்கு சில நாட்கள் தாமதமானது. இதனால் நெல் வயல்களில் நெற்பயிர்கள் நெற்கதிர்களாக இன்னும் போதிய அளவு அறுவடைக்கு ஏற்றவாறு முற்றவில்லை. மேலும் நெற்கதிர்கள் நன்கு முற்றி நெல்மணிகள் உருவாவதற்கு இன்னும் சில கூடுதல் நாட்கள் வரை ஆகும். இதனால் முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் இந்த ஆண்டு தாமதம் அடைந்து உள்ளன.

கூடுதல் மகசூல் பலன்

இதன்படி அடுத்த பிப்ரவரி மாதம் இறுதியில் முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை எந்திரங்கள், கூலி ஆட்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதன்பின்பு இப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் துரிதமாக நடைபெறும். பொதுவாக முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு தோறும் ஒற்றைப்படை, இரட்டைப்படை மதகுகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சாதாரண மற்றும் திருந்திய நெல் சாகுபடி நல்ல கூடுதல் மகசூலுடன் வருமானம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story