மழையில் சாய்ந்த நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை
சாலியமங்கலம் பகுதியில் மழையில் சாய்ந்த நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மெலட்டூர்;
சாலியமங்கலம் பகுதியில் மழையில் சாய்ந்த நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அறுவடை பணி
தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை பருவத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் இருந்த நெற்பயிர்கள்கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது.நீரில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கடந்த சில தினங்களாக மழைநீரை வடிய வைத்து மழை நீரை வெளியேற்றிய நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால் விவசாயிகள் வயலில் சாய்ந்துள்ள நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயலில் சாய்ந்த பயிர்கள்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-சாலியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் கோடைசாகுபடியாக அதிக அளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழை நீரில் மூழ்கிய நிலையில் மழை நீரை வடிய வைத்துள்ளோம். தற்போது மழை பெய்யும் காலநிலை உள்ளதால் பயிர்களை காப்பாற்ற எந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினா்.