போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் அறுவடை பணி விருத்தாசலம் அருகே பரபரப்பு


போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் அறுவடை பணி விருத்தாசலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் அறுவடை பணியால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி -ஞான ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு வாரிசு இல்லை. கடந்த 2019-ம் ஆண்டு ராமசாமி உயிரிழந்தார்.

இந்நிலையில், ஞானஜோதி தனக்கு அந்த பகுதியில் சொந்தமான விவசாய நிலத்தில் பயிர் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், அந்தவிவசாய நிலம் தனக்கு சொந்தம் எனவும், பயிர் செய்யக்கூடாது எனவும், பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பிரச்சினைக்குாிய இடத்தில் பயிர் செய்யப்பட்டு இருந்த நிலத்தில் பயிர் செய்யப்பட்டு இருந்த நெற்பயிறை ஞானஜோதி தரப்பினரை அறுவடை செய்யவிடாமல், தனிநபர் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இது தொடர்பாக ஞானஜோதி தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ஞானஜோதிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதன்பின்னரும் அறுவடை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால், கோர்ட்டு உத்தரவு நகலுடன் ஞானஜோதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன், ஞானஜோதி தனது நிலத்துக்கு அறுவடை எந்திரம் கொண்டு சென்று அறுவடை பணிகளை மேற்கொண்டார்.

விவசாய நிலத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல் அறுவடை பணி நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story