சம்பா பயிரை காப்பீடு செய்ய வாய்ப்பு
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் சம்பா பயிரை காப்பீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ் கூறினார்.
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் சம்பா பயிரை காப்பீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
வடகிழக்கு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பயிர்க்காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து சம்பா, தாளடி நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நாளை (21-ந் தேதி) வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வாய்ப்பு
எனவே நாகை மாவட்டத்தில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாமல் விட்ட விவசாயிகள் இன்று அல்லது நாளை (திங்கட்கிழமை) பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.