நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 7:15 PM GMT (Updated: 2023-01-26T00:46:03+05:30)

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடி ஊராட்சி பகுதியில் 500 ஏக்கரில் சம்பா, தாளடி நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி வாழ்குடி பகுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story