நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறப்பு


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறப்பு
x

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை திறப்பு

திருப்பூர்

திருப்பூர்

மடத்துக்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கி செயல்படுகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம், எஸ்.கே.புதூர் கூட்டுறவு சங்க கட்டிடம் ஆகிய இடங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற உள்ளது.

விவசாயிகள் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து, நெல் விற்பனை செய்ய வசதியாக கொள்முதல் பருவம் 2022-23-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்ய வேண்டும்

எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக நெல் விற்பனை செய்யும் நாள், நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160-க்கும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115-க்கும் விற்பனைசெய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட மண்டல மேலாளர் அலுவலகத்தை 94437 32309 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story