நீடாமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்
நீடாமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 153 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 41 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story