நீடாமங்கலத்தில் இருந்து நெல்லைக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு
நீடாமங்கலத்தில் இருந்து நெல்லைக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்
நீடாமங்கலத்தில் இருந்து நெல்லைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு, கோவிலூர், ஆதனூர், அசேஷம், இடையர்நத்தம், தெற்குநத்தம் ஆகிய கிராமங்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட ஆயிரம் டன் பொதுரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத்தொடர்ந்து நெல் அரவைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story