ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்து நாசம்


ஏராளமான நெல் மூட்டைகள்  நனைந்து நாசம்
x

தஞ்சை அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்து நாசமடைந்தன.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்து நாசமடைந்தன.

கொட்டித்தீர்த்த கனமழை

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 17 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த திடீர் மழையினால் பல இடங்களில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தஞ்சை மாவட்டம் முன்னையம்பட்டியில் நுகர் பொருள் வாணிபக்கழக திறந்த வெளி சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் அரவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தரையில் சவுக்கு கட்டைகள் போடப்பட்டு அதன் மீது நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நெல் மூட்டைகள் நனைந்து நாசம்

தற்போது பெய்த பலத்த மழையால் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது. இதில் பல நெல் மூட்டைகள் சாக்குகள் கிழிந்தும் மழையில் நனைந்தும் சிதறி கிடக்கிறது. சில நெல் மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் முளைத்து காணப்படுகிறது. திறந்தவெளி சேமிப்புக்கிடங்ைக மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழையில் நனைந்த நெல் மூட்டைகளை மாற்றும் பணியில் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இவ்வாறு நெல்மூட்டைகளை அவசரமாக லாரிகளில் ஏற்றி அனுப்பும் போது ஏராளமான நெல் மூட்டைகள் சிதைந்து நெல்மணிகள் சிதறி வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.


Next Story