கெடிலம் ஆற்றில் மூழ்கி பெயிண்டா் பலி


கெடிலம் ஆற்றில் மூழ்கி பெயிண்டா் பலி
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூா் கெடிலம் ஆற்றில் மூழ்கி பெயிண்டா் பலியனார்.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் பன்னீர்செல்வம் (வயது 40), பெயிண்டா். இவர் நேற்று காலை கடலூர் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைக்கு சென்றார். பின்னர் ஆற்றின் கரையில் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஆற்றில் இறங்கி கால் கழுவ முயன்றுள்ளார். அப்போது அவர் எதிா்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்தாா். இதில் அவர் நீரில் மூழ்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, கெடிலம் ஆற்றில் இறங்கி, பன்னீர்செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை பிணமாக மீட்டனர்.

இதையடுத்து கடலூா் புதுநகா் போலீசார், பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story