Normal
வீடுகளில் திருடிய பெயிண்டர் கைது
பாவூர்சத்திரம் அருகே வீடுகளில் திருடிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மடத்தூரில் இரவு நேரங்களில் ஒரே நாளில் பல வீடுகளில் பணம் திருட்டு போவதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு பொன்னரசு, பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், போலீசாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே ஊர் ராஜீவ் காலனியை சேர்ந்த மாடசாமி மகன் ஆனந்த் (வயது 21) என்பதும், கொத்தனார் மற்றும் பெயிண்டர் வேலை பார்த்துக்கொண்டே வீடுகளில் நோட்டமிட்டு இதுபோன்ற திருட்டு சம்பவங்களை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்தை கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story