பெயிண்டர் தூக்குப் போட்டு தற்கொலை


பெயிண்டர் தூக்குப் போட்டு தற்கொலை
x

பெயிண்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29), பெயிண்டர். இவர் கடந்த 7-ந் தேதி வீட்டில் குடி போதையில் தூக்குப் போட்டுக் கொண்டார். உடனடியாக அவர் வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story