பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை


பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் புது காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் அலெக்ஸ் (வயது 37). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அலெக்சுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் அலெக்ஸ் மது குடித்து வந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர், ஊருக்கு அருகே உள்ள சுடுகாடு பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கினார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story