சைக்கிள் மீது மொபட் மோதி பெயிண்டர் பலி
கீழ்வேளூர் அருகேசைக்கிள் மீது மொபட் மோதி பெயிண்டர் பலியானார்.
நாகப்பட்டினம்
சிக்கல்:
திருவாரூர் மாவட்டம் ஆமூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அருள் ஆரோக்கியராஜ் (வயது 50).இவர் கீழ்வேளூரில் உள்ள மரப்பட்டறையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குருமாணங்குடி- தென்ஓடாச்சேரி சாலையில் சென்ற போது எதிரே வந்த மொபட், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருள் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புகாரின் பேரில் மொபட்டை ஓட்டி வந்த தென்னலக்குடியை சேர்ந்த சிவராமன் என்பவர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story