தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொலை
வேலூர் பெரியார் பூங்காவில் தூங்கிக்கொண்டிருந்த பெயிண்டர், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூர் பெரியார் பூங்காவில் தூங்கிக்கொண்டிருந்த பெயிண்டர், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மனைவி பற்றி தவறாக பேச்சு
வேலூர் ஓல்டுடவுன் எம்.ஜி.ஆர்.நகர் செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37), பெயிண்டர். இவருடைய நண்பர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த முன்னா என்ற அகேஷா (37), நேதாஜி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
மணிகண்டன், முன்னா ஆகிய இரு குடும்பத்தினரும் சகஜமாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாவின் மனைவி பற்றி தவறாக பேசியதாகவும், அதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதையடுத்து இருவருக்கும் இடையே மனக்கசப்பு காணப்பட்டுள்ளது.
தலையில் கல்லை போட்டு கொலை
இந்த நிலையில் நேற்று மாலை வேலூர் பெரியார் பூங்காவில் உள்ள குடிநீர் தொட்டி அருகே மணிகண்டன் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற முன்னா இதனை கண்டு பூங்காவிற்குள் சென்று அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து மணிகண்டன் தலையில் தூக்கி போட்டார்.
இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். இதையடுத்து முன்னா அங்கிருந்து ஓடி விட்டார்.
படுகாயம் அடைந்து அலறிய மணிகண்டனின் சத்தத்தை கேட்டு அந்்த பகுதியில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து முன்னாவை கைது செய்தார்.
மனைவியை பற்றி தவறாக பேசியதால் மணிகண்டன் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என்று முன்னா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.