ஆலங்குடி நூலகத்தில் ஓவியப்போட்டி


ஆலங்குடி நூலகத்தில் ஓவியப்போட்டி
x

ஆலங்குடி நூலகத்தில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கலிபுல்லா நகரில் உள்ள நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது விரும்பிய ஓவியங்களை வரைந்தனர். ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக வரைந்த மாணவர்களை பாராட்டி ஆலங்குடி வாசகர் வட்டத்தலைவர்கள் பாபுஜான் மற்றும் கவிஞர்.ரமராமநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர். ஓவியப்போட்டியில் கல்லாலங்குடியை சேர்ந்த சுவேதாஸ்ரீ முதலிடமும், கமலி இரண்டாமிடமும், தர்ஷினி மூன்றாமிடமும் பெற்றனர். ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தங்களை நூலகத்தில் உறுப்பினராக இணைத்து கொண்டனர். முடிவில் நூலகர் ரெங்கசாமி நன்றி கூறினார்.


Next Story