பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
காவலர் வீரவணக்க நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடந்தது.
கோத்தகிரி,
சீன ராணுவம் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் எல்லையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி, காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி காவல்துறை சார்பில், போலீசாரின் பணிகள் குறித்து மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் ஓவிய போட்டி நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு போலீசாரின் பணிகள் மற்றும் அவர்களது தியாகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு காவலர் வீரவணக்க நாளில், பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
கோடநாடு அருகே கெரடாமட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.