மாணவர்களுக்கு ஓவியப்போட்டி


மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
x

விருதுநகரில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

விருதுநகர்


குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நேருவின் அரை உருவப்படம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கே.மடத்துப்பட்டி யூனியன் தொடக்கப்பள்ளி மாணவன் நவநீத் முதலிடத்தையும், சிவகாசி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் தருண் 2-வது இடத்தையும், ராஜபாளையம் டி.ஏ.கே.எம். ராமம்மாள் ஆரம்பப்பள்ளி மாணவி ரக்‌ஷிகா 3-வது இடத்தையும் பெற்றனர். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 14-ந் தேதி காலை 12 மணி அளவில் அருங்காட்சியகத்தில் வைத்து பரிசுகள் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்தார்.


Next Story