மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
குத்தாலம் அருகே மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் அருகே மல்லியம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 37-ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 14-ந் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம், பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மல்லியம் கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story