'பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும்' - தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை


பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும் - தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை
x

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை தமிழில் நடத்த வலியுறுத்தி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மற்றும் நிர்வாகிகள், வெவ்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தல் கமிஷனர் குமரகுருபரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் இதுகுறித்து பெ.மணியரசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'பழனி கோவிலில் நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தன்றும் அதற்கு முன்பும், பின்பும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் கும்பாபிஷேகம் உள்பட அனைத்திலும் தமிழ் மந்திரம் இடம் பெற வலியுறுத்தி மனு அளித்தோம். ஆனால் தமிழ்குமரன் கோவிலான பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ந்தேதி நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தையும், அதையொட்டி நடக்கும் நிகழ்வுகளையும் தமிழ் வழியில் இப்போது நடத்த முடியாது. வல்லூநர் குழுவின் அறிக்கை வரட்டும் என்று கமிஷனர் கூறுகிறார்.

எனவே, வருகிற ஜனவரி 20-ந்தேதி அன்று பழனியில் காலையில் இருந்து மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்து உள்ளோம்'

என்று அவர் கூறி உள்ளார்.


Next Story