பல்லடம் படுகொலை: மேலும் ஒருவர் கைது..?


பல்லடம் படுகொலை: மேலும் ஒருவர் கைது..?
x
தினத்தந்தி 5 Sept 2023 10:21 AM IST (Updated: 5 Sept 2023 11:48 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர்,

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பலியானவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெஞ்சை பதறவைக்கும் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில், பல்லடம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனை முத்தையா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.


Next Story