பாமாயில் விலை குறைந்தது
விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயிலின் விலை குறைந்துள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயிலின் விலை குறைந்துள்ளது.
வத்தல்
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடைக்கு ரூ.8,300 ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11,100 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,800 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.10,500 ஆகவும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.11,500 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.11,700 முதல் ரூ.12,500 வரையிலும் விற்பனையானது.
மல்லி லயன் ரகம் 40 கிலோவிற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,200 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,800 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
பாமாயில்
கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.100 விலை உயர்ந்து ரூ.3,100 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.6,600 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.35 விலை குறைந்து ரூ.1,440 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.5,400 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,450 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோவிற்கு ரூ.40 விலை உயர்ந்து ரூ.3,920 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,600 ஆகவும், பொரிகடலை 50 கிலோ ரூ.4 ஆயிரம் ஆகவும் விற்பனை ஆனது.
மைதா முதல் ரகம் ரூ.4,360 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,600 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,460 ஆகவும் விற்பனையானது.
பட்டாணி பருப்பு
கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,040 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.5,600 முதல் ரூ.6,200 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6,900 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,800 ஆகவும் விற்பனையானது.
காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோவிற்கு ரூ.20,100 ஆகவும், ஏ ரகம் ரூ.20,600 ஆகவும், சி ரகம் ரூ.17,300 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.10,700 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.9,600 ஆகவும் விற்பனையானது.