பனை பொருட்களின் விற்பனை கூடம்


பனை பொருட்களின் விற்பனை கூடம்
x

திருவண்ணாமலையில் பனை பொருட்களின் விற்பனை கூடத்தை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பனை பொருட்களின் விற்பனை கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.

இந்த விற்பனை கூடத்தில் பனை பொருட்கள், பனை வெல்லம் கலந்த சுக்குகாபி, கதர் கிராம தொழில் வாரிய உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் பனை வெல்லத்தில் தயார் செய்யப்பட்ட சுக்குகாபியை குடித்து ருசி பார்த்தார்.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் ரங்கசாமி (விழுப்புரம்), உதவி திட்ட அலுவலர் ஜான்சன், காதி கிராப்ட் மேலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story