இளையான்குடியில் 20000 பனை விதைகள் நடவு நிறைவு விழா
இளையான்குடியில் 20000 பனை விதைகள் நடவு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடியில் 20000 பனை விதைகள் நடவு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலும், வருவாய் கோட்டாட்சியர் சுகிதா முன்னிலையில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்கள் பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து இளையான்குடி கண்மாய், புறவழிச்சாலை சாலையூர் கண்மாய்க்கரை, இளையான்குடி-பரமக்குடி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் பனை விதைகளை சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஏற்பாட்டின்பேரில் நடவு செய்யப்பட்டன. 20000 பனை விதைகள் நடவு செய்யும் நிறைவு நாளில் இளையான்குடி தாசில்தார் அசோக்குமார் தலைமையில் பனை விதைகளை மாணவ, மாணவிகள் நடவு செய்தனர். இதில், சிவகங்கை வைகை பட்டாளம் அமைப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள் இளங்கோவன், அன்பரசன், பிரபாகரன், இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், தலைமை ஆசிரியர் முகம்மது இலியாஸ், ஆசிரியர்கள் சிக்கந்தர் சுலைமான், பாரதி கண்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியராஜன், அலுவலர் தனராஜ், உதவி அலுவலர் ஜெகதீஷ், சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் சாகுல் ஹமீது, பொருளாளர் பார்த்திபன், சேக் உதுமான், வருவாய் ஆய்வாளர் பிரபு, கிராம உதவியாளர் லட்சுமணன், செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.