பாம்பன் ரெயில் பால பணி: கன்னியாகுமரி-ராமேசுவரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தம்


பாம்பன் ரெயில் பால பணி:  கன்னியாகுமரி-ராமேசுவரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தம்
x

பாம்பன் ரெயில் பால பணி: கன்னியாகுமரி-ராமேசுவரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தப்படுகிறது

மதுரை


திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், இந்த ரெயிலின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22621) வருகிற 7-ந் தேதி, 9-ந் தேதிகளிலும், கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22622) வருகிற 8-ந் தேதி ஆகிய நாட்களில் இரு மார்க்கங்களிலும் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும்.


Next Story