பனை மரங்களை அதிக அளவு வளர்க்க நடவடிக்கை
நுங்கு உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதால் பனை மரங்களை அதிகளவு வளர்க்க அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் தரும் நுங்கு
கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் பள்ளி முன்பு நுங்கு விற்கும் வியாபாரி ராசு கூறியதாவது:-
எனக்கு (ராசு) 59 வயதாகிறது. சொந்த ஊர் தென்காசி. பொள்ளாச்சியில் தங்கியுள்ளேன். 12 நுங்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 30 வருடமாக பனை மரத்தில் ஏறி நுங்குகளை பறித்து வியாபாரம் செய்து வந்தேன். வயது முதிர்வு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக நுங்கு விற்பனை செய்யும் பணியில் மட்டும் ஈடுபட்டுள்ளேன்.
பொள்ளாச்சியில் இருந்து நுங்கு விற்பனைக்கு வருகிறது. மூன்று முதல் நான்கு மாதம் வரை நுங்கு விற்பனை இருக்கும். மொத்த வியாபாரிகள் நுங்குகளை வெவ்வேறு பகுபனை மரங்களை அதிக அளவு வளர்க்க நடவடிக்கைடுத்து கூலியாக 600 தருகிறார்கள்.
அரசு நடவடிக்கை
நுங்கு உற்பத்தியை பொறுத்து வருடத்திற்கு மூன்று முதல் நான்கு மாதம் வரை விற்பனை இருக்கும். மீதி நாட்களில் கூலி வேலைக்கு செல்கிறேன். வருடத்திற்கு வருடம் நுங்கு உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. மத்திய-மாநில அரசுகள் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.