பனையம்பள்ளி கிராமத்தில்வேளாண் கல்லூரி மாணவிகள்வாழை வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்


பனையம்பள்ளி கிராமத்தில்வேளாண் கல்லூரி மாணவிகள்வாழை வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்
x

வாழை வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்

ஈரோடு

தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் தோட்டக்கலை மாணவிகள் பனையம்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வாழை கன்று வளர்ப்பு குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். மேலும் அதன் பயன்கள் குறித்தும் கூறினார்கள்.

வாழைக்கு ஏற்படும் நூற்புழு, வாடல் நோயின் தாக்கம், அறிகுறிகள் மற்றும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தல் குறித்து விழிப்புணர்வு அளித்தனர். வாழை நோய் பற்றிய தங்கள் சந்தேகங்களை விவசாயிகள் மாணவிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பவானிசாகர் துணை தோட்டக்கலை அலுவலர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.


Next Story