பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு


பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு
x

அம்மாப்பேட்டை வீரமகா காளியம்மன் கோவிலில் பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் உள்ள வீரமகாகாளியம்மன் கோவிலில் தனி சன்னதியில் கோவில் கொண்டுள்ள சவுபாக்கிய யோக வராகி அம்மன் சன்னதியில் பஞ்சமி திதியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சவுபாக்ய யோக வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாலை, காய்கனி மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி, சர்க்கரை பொங்கல், இனிப்பு வகைகள் வைத்து வழிபட்டனர்.


Next Story