சாந்தநாத சாமி கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு


சாந்தநாத சாமி கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு
x

சாந்தநாத சாமி கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். சிவபெருமான் உலகிற்கு படியளந்த நிகழ்வை குறிக்கும் வகையில் இந்த புறப்பாடு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான பஞ்சமூர்த்தி புறப்பாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், சாந்தநாதசாமி, வேதநாயகி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன்பு எழுந்தருளினர். கோவில் முன்பு இருந்து அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்கள் மூலம் புறப்பாடு நடைபெற்றது. இதில் தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன்பின் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story