பஞ்சநதிக்குளம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா


பஞ்சநதிக்குளம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா
x

பஞ்சநதிக்குளம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிகுளம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு அர்ச்சனை, மாவிளக்கு போடுதல், மொட்டை அடித்தல், காவடி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story