ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்திற்கு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேற்று ஊராட்சி மன்ற தலைவர்கள் திரண்டு வந்தனர். இதுபற்றி அறிந்து வந்த புவனகிரி போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆளுங்கட்சியில் உள்ள ஒன்றிய செயலாளர் தலையீடு அதிகம் இருப்பதால் ஊராட்சி நிர்வாகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை. எங்களை கேட்காமல் நிதியை ஒதுக்கி தீர்மானம் போடுமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றனர். தொடர்ந்து எங்களது கோரிக்கைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் 45 கிராம மக்கள் ஒன்று திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story