ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளிநடப்பு


ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளிநடப்பு
x

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சமூக தணிக்கை கூட்டம்

போளூர் ஒன்றியத்தில் வசூர், அத்திமூர், கேளூர் உள்பட 40 ஊராட்சிகள் உள்ளன. போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2020-21, 2021-22-ம் ஆண்டுகளுக்கான சமூக தணிக்கை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறியதாவது:-

40 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசு கட்டிடங்கள், சிமெண்டு, ஜல்லி சாலைகள், தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர்.

புறக்கணிப்பு

இந்த பணிகளுக்கு ஊராட்சி செயலாளர்கள் பெயரில் ஆணை வழங்குவதால், பணிகள் குறித்தும், பணிகளில் ஏற்படும் குறைகள் குறித்தும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு எதுவும் தெரியாது.

ஆகையால், இந்த பணிகள் ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் எப்படி சமூக தணிக்கை செய்ய முடியும்?. எனவே கூட்டத்தை நாங்கள் (ஊராட்சி மன்ற தலைவர்கள்) அனைவரும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story