ஊராட்சி மன்ற தலைவி தர்ணா


ஊராட்சி மன்ற தலைவி தர்ணா
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், துணை தலைவர் மீது பரபரப்பு புகார் கூறினார்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தொட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி வெங்கடேசன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் ஒன்றியக்குழு தலைவர் மலர் முருகன் மற்றும் விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி கூறுகையில், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள் என்பதால் ஊராட்சியில் எந்தவித பணிகளையும் செய்ய விடாமல் ஊராட்சி மன்ற துணை தலைவர் தடுக்கிறார். மேலும் என்னை பற்றி அவர், அவதூறு பரப்பி வருகிறார். இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

பரபரப்பு

அதற்கு போலீசார், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்து விட்டு சென்றார். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story