டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஊராட்சி மன்ற தலைவர் பலி


டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஊராட்சி மன்ற தலைவர் பலி
x

களம்பூர் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த களம்பூர் அருகே முக்குறும்பை கிராம ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை (வயது 50),

இவர் நேற்று இரவு களம்பூருக்கு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக போளூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

தட்டாங்குளம் அங்காளம்மன் கோவில் அருகே செல்லும்போது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து, வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அண்ணாமலையின் மனைவி அலமேலு களம்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த அண்ணாமலைக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story