கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மனு


கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மனு
x

மயிலாடுதுறை ஒன்றியம், கடுவங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்த்தென்றல் என்கிற மகேந்திரன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஒன்றியம், கடுவங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்த்தென்றல் என்கிற மகேந்திரன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை ஒன்றியம், கடுவங்குடி ஊராட்சி, 2022-23-ம் நிதியாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது முதல் கட்டமாக ரூ.20 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு டெண்டரும் விடப்பட்டுள்ளது. கடுவங்குடி ஊராட்சியில் விராலூர் கிராமத்தில் பெருமாள் கோவில் முதல் கீழத்தெரு வரை மண் சாலையை சிமெண்டு சாலையாக மாற்ற ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், விராலூர் கிராமத்தில் அப்படி பெருமாள் கோவிலும், அந்தப் பெயரில் சாலையும் இல்லை. மேலும், மற்றொரு பகுதியான பனையக்குடி கிராமத்தில் சுக்கிரான்குளம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. பனையக்குடி கிராமத்தில் சுக்கிரான்குளம் என்ற இடமே இல்லை. இதுவும் தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லாத தெருவிற்கு சாலைகள் போட டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே விடப்பட்ட டெண்டரை உடனடியாக ரத்து செய்து, சரியான இடத்தை தேர்வு செய்து, மறு மதிப்பீடு பெற்று டெண்டர் விட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story