ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தற்கொலை


ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தற்கொலை
x

குடியாத்தம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்

வேலூர்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்ைத அடுத்த நெட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 49), பஸ் மெக்கானிக். இவரது மனைவி செல்வி, நெட்டேரி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

ஜெய்சங்கர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ேமலும் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி செல்வியுடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மாடியில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெய்சங்கர் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

மயங்கிய நிலையில் இருந்த அவா் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டாா்.

ஆனால் அங்கு சிகிச்ைச பலனின்றி ஜெய்சங்கர் பரிதாபமாக உயிாிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வி அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், முனிகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story