ஊராட்சி களப்பணியாளர் சங்க கூட்டம்
நாகையில் ஊராட்சி களப்பணியாளர் சங்க கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகையில் தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமுதா, பொருளாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர் ஆகிய ஒன்றியங்களிலிருந்து பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பாலு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வங்கி மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்துவது, ஊராட்சி களப் பணியாளர் சங்க மாநில மையம் சார்பில் அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story