பெண்ணை தாக்கிய வழக்கில் ஊராட்சி தலைவர் கைது
களியக்காவிளை அருேக ெசாத்து தகராறில் பெண்ணை தாக்கிய வழக்கில் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளை அருேக ெசாத்து தகராறில் பெண்ணை தாக்கிய வழக்கில் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு
களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு சென்னிதட்டுவிளையை சேர்ந்தவர் தமரேசன். இவருடைய மனைவி சரோஜா (வயது50). இவர்களுக்கும் மாம்பரத்துவிளையை சேர்ந்த ஜெயன் மனைவி ஷபிமோள் (34) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
சம்பவத்தன்று ஷபிமோள் தரப்பில் சொத்தை அளப்பதற்காக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சவார்கர், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார், அதங்கோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஷபிமோள் ஆகியோர் வந்தனர். அவர்கள் நிலத்தை அளக்கும் போது அத்து மீறி சரோஜாவின் நிலத்தை அளந்ததாக கூறப்படுகிறது. இதனை சரோஜா தட்டிக்கேட்டார்.
தாக்குதல்
உடனே கவுன்சிலர் சவார்கர், சரோஜாவை கையால் தாக்கி கீழே தள்ளி எட்டி உதைத்தார். தொடர்ந்து அவருடன் வந்தவர்களும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் பேரில் சவார்கர், சசிகுமார் உள்பட 4 பேர் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் கவுன்சிலர் சவார்கர், சரோஜாவே காலால் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் 2 தனி படைகள் அமைத்து தேடி வந்தனர்.
ஊராட்சி தலைவர் கைது
இந்தநிலையில் மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.